www.garudavega.com

கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கங்க - CWC புகழ் மனைவியின் செல்ல கண்டிஷன்ஸ் 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான்.

CWC Pugazh wife Benz Riya possessive conditions

இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக, பின்னர் திரைப்படங்களிலும் எண்ட்ரி கொடுத்தார். அதன்படி, குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து, ‘என்ன சொல்ல போகிறாய்’, சந்தானம் நடித்த ‘சபாபதி’, அஜித் நடித்த ‘வலிமை’, சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய திரைப்படங்களில் புகழ் நடித்தார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் புகழ்,  Mr Zoo Keeper என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதனிடையே, 5 வருடங்களாக, தான் காதலித்து வந்த பென்ஸ் ரியா (எ) பென்ஸி எனும் பெண்ணை புகழ் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்தான் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த, ஆகஸ்ட் 16, 1947  படத்தில் நடித்துள்ள புகழ், தன் மனைவி தந்த ஊக்கம் பற்றி பிஹைண்ட்வுட்ஸில் பேசியுள்ளார்.

A.R. Murugadoss production மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்பிறகு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில், இப்படத்தின்  தயாரிப்பாளர்கள் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டனர். கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி நடிப்பில், இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் கதையை இப்படம் சொல்கிறது.

டிராமா, உணர்ச்சிமிகு தருணங்கள், காதல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த டீசர், பார்வையாளர்கள் அனைவரிடத்திலும், தேசிய உணர்வு மற்றும் பெருமையுடன் அவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு சிலிர்ப்பான பயணத்தை தரும்படி அமைந்துள்ளது. Purple Bull Entertainment வழங்கும், A.R. Murugadoss production சார்பில், “ஆகஸ்ட் 16, 1947” படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான சிறப்பு பேட்டியில் பிஹைண்ட்வுட்ஸில் பேசிய நடிகர் புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்களுடன் ஜாலியாக செய்யும் சேட்டைகள் குறித்து ஆரம்பத்தில் பொசசிவ் ஆன பென்ஸி பின்னர் தன்னை புரிந்துகொண்டதாகவும் எனினும் கட்டிப்பிடிப்பதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என பென்ஸி கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிடும் புகழ், தான் அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கங்க - CWC புகழ் மனைவியின் செல்ல கண்டிஷன்ஸ் 😍 வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CWC Pugazh wife Benz Riya possessive conditions

People looking for online information on August 16 1947, Benz Riya, Cook with comali, Cook With Comali 4, CWC pugazh, Gautham Karthik will find this news story useful.