குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது.
Also Read | சமூக வலைதளத்தில் fan கேட்ட கேள்வி.. நடிகை ஆல்யா மானசா கொடுத்த நச் டிப்ஸ்!
என்ன சொல்ல போகிறாய்…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர்கள் அஸ்வின் குமார் மற்றும் புகழ். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படமாக “என்ன சொல்ல போகிறாய்” திரைப்படம் உருவானது. இந்த படத்தில் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடித்தனர். குணசித்திர கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சென்னையின் நகர்ப்புற பகுதியில் நடைபெறும் காதல் காமெடி கதையாக "என்ன சொல்லப் போகிறாய்" திரைப்படம் உருவானது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் பணியாற்ற, விவேக்-மெர்வின் இசை அமைத்தனர். டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரித்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கினார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது…
ஆடியோ விழாவில் எழுந்த சர்ச்சை…
இந்த படத்தின் ஆடியோ விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் கதாநாயகனான அஸ்வின் தனது திரையுலக பயணம் பற்றியும், ரசிகர்கள் அளித்த ஆதரவு பற்றியும் பேசினார். ஆனால் அந்த நிகழ்வில் எதிர்பாராத விதமாக தான் கதை கேட்கும் முறைப் பற்றி பேசியது சர்ச்சையானது. அதையடுத்து அவர் மேல் விமர்சனங்கள் எழுந்த நிலையில் பின்னர் அவர் அதற்கு தன்னிலை விளக்கம் அளித்தார்.
தொலைக்காட்சி பிரிமீயர்…
இதையடுத்து படம் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி இந்த திரைப்படம் ஜி 5 ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் பரவலாக கவனத்தைப் பெற்ற நிலையில், இப்போது ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
வரும் மே 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு இந்த திரைப்படம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் பிரிமீயர் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8