www.garudavega.com

"என்னை சுத்தி சர்ச்சைகள் வந்ததும்.. இந்த இடத்துக்கு நான் வர".. CWC அஸ்வின் OPEN டாக்!!.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைனா, கும்கி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் இயக்குனர் பிரபு சாலமன்.

CWC Ashwin about his learning in cinema exclusive

Also Read | ஹவுஸ்மேட்ஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. களைகட்டிய வீடு.. இதுக்கு தான் Waiting!!.. bigg boss tamil 6

இவரது இயக்கத்தில் அடுத்ததாக 'செம்பி' திரைப்படம், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகர் அஸ்வின் குமார் இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல, நடிகை கோவை சரளாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். வயதான கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் கோவை சரளா ட்ரைலரில் வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கி அதிகரித்துள்ளது.

CWC Ashwin about his learning in cinema exclusive

இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்து முடிந்துள்ளது. அஸ்வின் குமார், கோவை சரளா, தவிர தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்க, எம். ஜீவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

செம்பி படத்தின் ட்ரைலர் அதிக ஆவலை உண்டு பண்ணி உள்ளதால், படத்தின் ரிலீசையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், செம்பி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன், நடிகை கோவை சரளா, நடிகர் அஸ்வின் குமார் மற்றும் இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் Behindwoods TV சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.

CWC Ashwin about his learning in cinema exclusive

அப்போது, அனைவரும் செம்பி படத்தை குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்தப் பேட்டியில் தனது சினிமா அனுபவம் குறித்து பேசிய அஸ்வின், "சினிமாவில் சில விஷயங்கள் செய்யக்கூடாதவை, செய்யக்கூடியவை என்று இருக்கின்றன. அவற்றை பற்றி இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். நானும் ஒரு சாதாரண மனிதனாகவே சினிமாவுக்கு வருகிறேன் எனும் போது சர்ச்சைகள் திடீரென எனக்கு புதிதாகவும், வியப்பாகவும் இருந்தது. என்னுடைய நோக்கமும் அப்படி இல்லை என்பதால் நான் இன்னும் அதிர்ந்தேன். மிகவும் உறுதுணையாக எனக்கு இருந்தது இன்னும் பலர் அப்படி இருந்தால் அதை எதிர்கொள்வது எளிமையாக இருந்திருக்கும். ஆனாலும் சில விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

CWC Ashwin about his learning in cinema exclusive

நான் இந்த இடத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தேன். இதற்காக பல தியாகங்கள் செய்திருக்கிறேன். அது பலருக்கும் தெரியப் போவதில்லை. ஆனால் இது போன்ற ஒரு விஷயம் பெரிதாகி விடுகிறது. ஒரு சினிமா வாய்ப்பு என்பது சாதாரணம் கிடையாது. இந்த இடத்திற்கு வருவதற்கு நான் நிறைய குறும்படங்கள், சுயாதீன படங்கள், ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ், துணை கதாபாத்திரங்கள் என பலவற்றை செய்திருக்கிறேன் அதனால் இவ்வளவு செய்து வரும் பொழுது திடீரென ஒரு விஷயம் இப்படி ஆகிவிடுகிறது என்னும்போது இன்னும் அது சிந்திக்க வைக்கிறது. மேலும் கற்றுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "அட, மீனாவா இப்டி?".. அசிங்கப்படுத்திய அப்பாவை லெஃப்ட், ரைட் வாங்கி சவால்! அதிர்ந்த குடும்பம்..

"என்னை சுத்தி சர்ச்சைகள் வந்ததும்.. இந்த இடத்துக்கு நான் வர".. CWC அஸ்வின் OPEN டாக்!!.. EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CWC Ashwin about his learning in cinema exclusive

People looking for online information on CWC Ashwin, Kovai sarala, Sembi will find this news story useful.