www.garudavega.com

ஒரே மருத்துவமனையில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சிகிச்சை - கேப்டன் எப்படி இருக்காரு ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்கு சென்னையில் உள்ள மியோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் நேற்று (28/09/2020) கொரோனா தொற்று காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் விஜயகாந்த் பரிசோதனைக்கு பிறகு அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தற்போது அவருக்கு அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Current official status of Vijayakanth and wife Premalatha after affected by Covid 19 | கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், பிரேமலதா குறித்து மருத

People looking for online information on Covid-19, Premalatha Vijayakanth, Vijayakanth will find this news story useful.