www.garudavega.com

வெறித்தனம்.. TITLE-னாலே விஜய் ஆண்டனி தான்! அடுத்த படத்துக்கு பேரு இதுவா? வேற லெவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Antoy: இசையமைப்பாளராக இருந்து நடிகராக மலர்ந்தவர் விஜய் ஆண்டனி.

CS Amuthan Vijay Antony New film title Raththam deets

‘நான்’ படத்தில் அறிமுகம்

தமிழின் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளராக மட்டும் விளங்கிய விஜய் ஆண்டனி, ‘நான்’ திரைப்படம் மூலமாக திரைத்துறையில் ஹீரோவாக கால் பதித்தார். இதனைத் தொடர்ந்து சலீம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Also Read: "இளையராஜாவுக்கே தெரியாதாம்!".. விண்வெளியில் ராஜா பாட்டு ஒலிக்க போகுதா? உண்மை என்ன? Exclusive

கோடியில் ஒருவன்

அதன் பிறகு நடிகராக நடிகர் விஜய் ஆண்டனி காளி, அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கொலைகாரன் என பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.  விஜய் நடித்து சமீபத்தில் கோடியில் ஒருவன் திரைப்படம் திரையாங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அந்த படம், அமேசான் ப்ரைம்  ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகத் தொடங்கியது. 

CS Amuthan Vijay Antony New film title Raththam deets

தமிழ்ப்படம் இயக்குநருடன்

இதனிடையே விஜய் ஆண்டனியை, பிரபல தமிழ்ப்படம், தமிழ்ப்படம்-2 ஆகிய படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த படத்தை இன்ஃபினிட் ஃபிலிம் வெஞ்சூர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

CS Amuthan Vijay Antony New film title Raththam deets

வித்தியாசமான டைட்டில்

விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களின் தலைப்புகளான பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன் ஆகிய கவனம் ஈர்க்கும் வகையிலான தலைப்புகள் வரிசையில் இரத்தம் எனும் இந்த தலைப்பும் படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்நிலையில் சி.எஸ்.அமுதன் இயக்கும் இந்த படத்துக்கு ‘இரத்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

CS Amuthan Vijay Antony New film title Raththam deets

அடுத்த படங்கள்

எனினும் மேற்கண்ட டைட்டில் பற்றிய தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதேபோல் விஜய் ஆண்டனி நடிப்பில் சலீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புகழின் காதலி அஜீத் ரசிகையாமே? Love U Partner-னு ஒரே ஒரு Postதான்.. செம வைரல்.. யாருப்பா இந்த ரியா?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CS Amuthan Vijay Antony New film title Raththam deets

People looking for online information on CS Amuthan, Raththam, Vijay Antony, Vijay Antony Raththam will find this news story useful.