தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்.. STRONG-ஆன கருத்துடன், ஆதரவாக நிற்கும் ஹர்பஜன் சிங்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளம் சம்பவத்திற்கு ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் | cricketer and actor harbajan singh opens on sathankulam jeyaraj and fenix murder

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். இவர் ஐ.பி.எல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, தமிழ்நாட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் இவர் நடிகை லாஸ்லியா, அர்ஜுன், சதீஷ் உள்ளிடோர் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் உயிரிழந்திருக்கும் செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பிரச்சனையில் தனது வலிமையான கருத்தை முன் வந்து தெரிவித்ததற்கு ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகார் தவானும் இச்சம்பவத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

மற்ற செய்திகள்

சாத்தான்குளம் சம்பவத்திற்கு ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் | cricketer and actor harbajan singh opens on sathankulam jeyaraj and fenix murder

People looking for online information on Friendship, Harbhajan Singh, Sathankulam Jeyaraj and Fenix will find this news story useful.