நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
சக்ரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பின்னர், நடிகர் விஷால், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த எனிமி திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால், விஷால்31, விஷால்32, விஷால்33 என அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இவற்றுள் விஷால் நடிக்கும் 31வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்துக்கு வீரமே வாகை சூடும் என பெயரிடப்பட்டு, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதனிடையே நடிகர் விஷால் தம்முடைய 32வது திரைப்படத்திற்காக நடிகை சுனைனாவுடன் இணைவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த திரைப்படத்துக்கு பின்னர் லத்தி என்று தலைப்பு அறிவிக்கப்பட்டதுடன் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியானது. விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸின் கீழ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். A.வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதேபோல் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் விஷால்33 என்கிற பெயரிடப்படாத படத்தகவலையும் இயக்குநரே தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யா மீது பணம் கையாடல் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் திரு.ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரை விரைந்து முடிக்க காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கணக்காளர் ரம்யா என்பவர் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணியில் இருந்தபோது பண கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகார் ஒன்றினை காவல்துறையிடம் அளித்தார், அப்புகாரின் பெயரில் முதல் குற்றப்பத்திரிகை பதிவு செய்த பின்னரும் பல மாதங்களாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறாமல் இருந்த சூழ்நிலையில் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையை விரைந்து முடிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்த விரைந்து முடிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.