விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சரத். இவரும், தீனாவும் இணைந்து செய்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் பலரது பேவரைட்டாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் அதன் பின்பு 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக போன சீசனில் இருந்த புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலாவுடன் இந்த சீசனில் சுனிதா, சரத் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.
இந்நிலையில் 'கலக்கப் போவது யாரு' சரத்திற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. கடந்த வருடம் மார்ச் 6 ஆம் தேதி சரத்திற்கு கிரித்திகா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் அக்டோபர் மாதம் 26ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவரது மனைவி அவருக்கு செம சப்ரைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். வீட்டில் அழகாக அலங்கரித்து கேக் உடன் கொண்டாடியுள்ளனர். இதனை பார்த்த சரத் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த அழகான வீடியோ தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சரத். இதனையடுத்து அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.