Michael Coffee house
Reliable Software
www.garudavega.com

"நான் அழுததுக்கு உண்மையான காரணம் இதான்"... முதல் முறையாக மனம் திறந்த சரத்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

cooku with comali sarath emotional speech முதல் முறையாக மனம் திறந்த சரத்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சரத். இவரும், தீனாவும் இணைந்து செய்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் பலரது பேவரைட்டாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் அதன் பின்பு 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்தார். கடந்த வருடம் 'கலக்கப் போவது யாரு' சரத்திற்கு கிரித்திகா என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் குக் வித் கோமாளி பைனல்ஸின் போது சரத் கண் கலங்கி அழுதது அனைவர் மனதையும் உடைக்கும் வண்ணம் இருந்தது. வெற்றிக்காக ஓடும் ஒரு கலைஞனின் வேதனை அந்த கண்ணீரில் இருந்தது. அதை பார்த்தவுடன் அஸ்வின் உட்பட பலரும் கலங்கிவிட்டனர். இந்நிலையில் தான் அழுததற்கான உண்மையான காரணம் இதுதான் என்று நடிகர் சரத் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் தனக்கும் அஷ்வினுக்குமான நட்பை பற்றியும் பலருக்கும் தெரியாத விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டி இதோ..!

"நான் அழுததுக்கு உண்மையான காரணம் இதான்"... முதல் முறையாக மனம் திறந்த சரத்...! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with comali sarath emotional speech முதல் முறையாக மனம் திறந்த சரத்

People looking for online information on Cooku with comali, Sarath will find this news story useful.