Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

"இதனால் தான் குக் வித் கோமாளிக்கு வரவில்லை"... நடிகை பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

cooku with comali pavithra new viral post நடிகை பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு

இந்த வாரம் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக சீசன் 1 மற்றும் 2 போட்டியாளர்கள் மோதிக்கொண்டனர். அதேபோல் இந்த வாரம் பவித்ரா பங்கேற்கவில்லை . ரம்யா பாண்டியன் மற்றும் புகழ் இருவரும் ஜோடி சேர்ந்து சமைத்தனர். மிகவும் கலகலப்பாக சென்ற அந்த வாரத்தில் பவித்ரா மட்டும் சில காரணங்களால் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த வாரம் கோமாளிகள் அனைவரும் பேய் மற்றும் அமானுஷ்ய சம்பந்தமான வேடங்களில் கலக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வாரமும் பவித்ரா பங்கேற்க வில்லை என்பதால், அவரது ரசிகர்கள் பலரும் விஜய் டிவியின் வீடியோக்களுக்கு கீழே "பவித்ரா எங்கே?" என்று கமென்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து பவித்ரா தற்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறும் பொழுது "சில தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களாக வரமுடியவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் வந்துவிடுவேன். உங்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். என் மேல் நீங்கள் காட்டும் அன்புக்காக, எனக்கு தரும் சப்போர்ட்டுக்கும் மிக்க நன்றி" என்று .

"இதனால் தான் குக் வித் கோமாளிக்கு வரவில்லை"... நடிகை பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு..! வீடியோ

Tags : Pavithra

மற்ற செய்திகள்

Cooku with comali pavithra new viral post நடிகை பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு

People looking for online information on Pavithra will find this news story useful.