www.garudavega.com
iTechUS

புகழை கையோட கூட்டிட்டு போய்... முதல் கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி.

Cooku with comali fame buy new car photo gone viral

Images are subject to © copyright to their respective owners

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்து கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

முன்னதாக அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், KPY சரத், மணிமேகலை, சுனிதா, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். அந்த வகையில், டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி இருந்தவர் சக்தி.

Cooku with comali fame buy new car photo gone viral

Images are subject to © copyright to their respective owners

குக் வித் கோமாளி செட்டிற்குள் எப்போதுமே சிரித்த முகத்துடன் கடி ஜோக்குகளை கூறிக் கொண்டு வளம் வந்த சக்தி, பலரின் ஃபேவரைட் கோமாளியாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், மிகவும் மகிழ்ச்சியில் ஒரு பதிவையும் தற்போது சக்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள சக்தி, அத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், சக்தியுடன் புகழும் இருக்கும் சூழலில், "என்னுடைய மகள் Myilu -வுடன். உங்கள் அனைவரின் ஆதரவுடனும், அன்புடனும் நான் எனது முதல் காரை வாங்கி உள்ளேன் மக்களே. புகழ் அண்ணே, ஐ லவ் யூணே. என் எல்லாம் தொடக்கத்தில் இருக்கும் என் அண்ணன்" என குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sakthi (@sakthii___)

 

தனது திறமையால் மெல்ல மெல்ல உயர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலம் அடைந்து முதல் கார் வாங்கியுள்ள சக்திக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with comali fame buy new car photo gone viral

People looking for online information on Cooku with comali, CWC Sakthi will find this news story useful.