விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதன் மூலம் பிரபலமாகியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நிறைவுபெற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் பங்குபெறும் செஃப் தாமோதரனின் மகள் அக்ஷயா Behindwoods Tv-க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசும்போது, “நீங்கலாம் இப்போது குக் வித் கோமாளியில் அவரை பார்க்கிறீர்கள். ஆனால் நான் ஸ்கூல் படிக்கும்போது அப்பா கல்லூரியில் புரொபசராக இருந்தார். அப்போதில் இருந்தே நிறைய Fun பண்ணுவார். ஸ்கூல் முடிந்ததும் அம்மா பாராமெடிக்கலில் பணிபுரிந்ததால், அவர் சொல்லும்போது எனக்கு டெண்டிஸ்ட் ஆகலாம் என தோன்றியது. பிறகு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொண்டேன். யுகே சென்றேன்.
யுகேவில் மாஸ்டர்ஸ் படித்தேன். அங்கும் 7, 8 வருடங்கள் பணிபுரிந்தேன். இப்போது இந்தியாவில் கிளினிக் தொடங்க திட்டமிடுகிறோம். திருமணம் வரையில் கூட 6 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என தொடங்கி கொஞ்சம் கண்டிப்புடன் இருப்பார். ஆனால் என்னிடம் ஒரு நண்பராகவே நடந்துகொள்வார். உம்மென்று இருக்க மாட்டார். எப்போது மகிழ்ச்சியுடன் மக்களுடன் பழகுவார். குழந்தைகளிடம் கூட குழந்தைகள் மாதிரியே பேசுவார். கல்லூரியில் பார்த்த அந்த ஜாலியான அப்பாவை இப்போது மீண்டும் குக் வித் கோமாளியில் பார்க்க முடிகிறது.
தினமும் போடும் புது கெட்டப்புகளை அவர் விரும்புகிறார். புகழ் அப்பாவுக்கு அப்பாங் என வைத்த பெயரைதான் எங்களது கசின் எல்லாரும் அழைப்பார்கள். நான் அழைத்ததில்லை. அப்பாங் கலக்குங்க. அஷ்வின் வீட்டுக்கு வந்திருந்தார். என்னிடம் சாதாரணமாக பேசினார். சகோதரர் போல பழக எளிமையானவர். எனக்கு அஷ்வின் சிவாங்கி காம்போ பிடிக்கும். எங்கே நல்ல சமையல் இருந்தாலும் அதை வீட்டில் வந்து சொல்வார். கனி மற்றும் அஷ்வின் சமைத்த உணவுகளை பற்றி சொல்வார்.
அப்பா ஒரு முறை அவருடைய கல்லூரி மாணவர்களுடன் என்னை அழைத்துச் செல்லும்போது,அந்த வேனில் இருந்த அந்த மாணவர்களின் தலை மேல் நடந்து செல்ல வைத்தார். அவர் என்னை ஜாலியாக விடுவார். திட்டமாட்டார் எதற்கும். என் நண்பர்கள் கூட அவருடன் நெருக்கமாக இருப்பதுண்டு. எங்களுக்குள் என்ன சண்டை நடந்தாலும் 1 மணி நேரத்துக்கு மேல் கூட பேசாமல் இருக்க முடியாது.” என தெரிவித்தார். அக்ஷயா பகிர்ந்துகொண்ட பல்வேறு விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.