Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

VIDEO: "என்ன ஒரு தங்க மனசு!".. 'சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு' சிவாங்கி, புகழ் கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி மூலம் புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் பிரபலமாகினர்.

Cook With Comali Pugazh Sivaangi Surprise குக் வித் கோமாளி

வழக்கமாக டிவி சீரியல் பார்க்காதவர்கள் கூட குக் வித் கோமாளி ஷோவை விரும்பிப் பார்க்கின்றனர். ஐந்த ஷோவில் அனைவருக்கும் பிடித்தமான அண்ணன் தங்கையாக இவர்கள் அடிக்கும் லூட்டியும் செய்யும் கலகலப்பான அட்ராசிட்டியும் எப்போதும் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

ALSO READ: “இந்திய அளவில் விவாதமான இந்த படம் தமிழ்ல வருது!”.. நிமிஷா கேரக்டரில் நடிக்கப்போறது யார்னு கெஸ் பண்ணுங்க?

இதேபோல் சிறப்பு விருந்தினர்கள் கூட இந்த ஷோவுக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதை அண்மையில் இந்த ஷோ பற்றி சிவகார்த்திகேயன் பேசியதில் இருந்து அறிய முடிகிறது.  இந்த ஷோவை தொடர்ந்து பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார். போட்டியாளர்களும் இந்த ஷோவில் இருந்து எலிமினேட் ஆனால் மிகவும் மிஸ் செய்வதாக உணர்கின்றனர்.

Cook With Comali Pugazh Sivaangi Surprise குக் வித் கோமாளி

அதற்குக் காரணம் இங்கு நிலவும் செம்ம கலாட்டாவான குட்டி குட்டி தருணங்கள் தான். அதுமட்டுமல்லாமல் இந்த டீம், முந்தைய குக் வித் கோமாளி போட்டியாளர்களுடனும், விஜய் டிவியில் நடக்கும் வேறு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடனும் கூட கலந்து செலிபிரேஷன்களை செய்து கொண்டாடும் விதத்தில் இந்த குக் வித் கோமாளி டீம் கவனம் ஈர்க்கின்றனர்.

Cook With Comali Pugazh Sivaangi Surprise குக் வித் கோமாளி

அந்த வகையில் அண்மையில் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னரானதின் மூலம் புகழ்பெற்ற பாடகர் மூக்குத்தி முருகனுக்கு குக் வித் கோமாளி சிவாங்கி மற்றும் புகழ் உள்ளிட்டோர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி, கலாட்டா செய்து அவரது இந்த பிறந்த நாளை மறக்க முடியாத நிகழ்வாய் மாற்றி அவரை நெகிழவைத்துவிட்டனர்.

ALSO READ: அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் ஜி.வி.பிரகாஷ் பட டைரக்டர்.. ஜோடி சேரும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்!

VIDEO: "என்ன ஒரு தங்க மனசு!".. 'சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு' சிவாங்கி, புகழ் கொடுத்த சர்ப்ரைஸ்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Pugazh Sivaangi Surprise குக் வித் கோமாளி

People looking for online information on Cook with comali, Pugazh, Sivaangi, Trending will find this news story useful.