www.garudavega.com

போடு வெடிய..தல தீபாவளி கொண்டாடிய புகழ் & பென்ஸி! வைரலாகும் சூப்பர் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் தல தீபாவளி கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook with Comali Pugazh Bensi Thala Deepavali Celebration

Also Read | 'துணிவு 'லுக்கில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்.. மனைவி ஷாலினியுடன் அஜித்குமார்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை படங்களில் நடித்துள்ளார்.

Cook with Comali Pugazh Bensi Thala Deepavali Celebration

முன்னதாக 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.  இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார்.

Cook with Comali Pugazh Bensi Thala Deepavali Celebration

இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது மனைவியுடன் புகழ், தல தீபாவளி கொண்டாடிய வீடியோ & புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பட்டாசு வெடித்து தீப்பொறி பறக்க புகழ் வெடி வெடிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் அமைந்துள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Also Read | அடிபொலி..!! தீபாவளி பட்டாசு வெடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. கலக்கும் ஃபோட்டோஸ்!

போடு வெடிய..தல தீபாவளி கொண்டாடிய புகழ் & பென்ஸி! வைரலாகும் சூப்பர் வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Pugazh Bensi Thala Deepavali Celebration

People looking for online information on Cook with comali, Cook with comali pugazh, Pugazh Bensi Thala Deepavali, Pugazh Bensi Thala Deepavali Celebration will find this news story useful.