Reliable Software
www.garudavega.com

அடுத்த ப்ளான் என்ன?. ரசிகர்களுக்கு 'குக் வித் கோமாளி' பவித்ரா சொன்ன நல்ல விஷயம்! !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை பவித்ரா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் களைகட்டியதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பவித்ரா வந்தார்.

cook with comali pavithra reveals about her next film to fans

இதனிடையே ரசிகர்களுடனான உரையாடல்லை பவித்ரா தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களை போல கடினமாக உழைக்கும் ஒரு நடிகையை பார்த்ததே இல்லை. தொடக்கத்தில் இருந்து இப்போது நீங்கள் அடைந்திருக்கும் இடம் வரையில் .. அன்புகள்” என குறிப்பிட்டுள்ள ரசிகர் ஒருவருக்கு நன்றி என பவித்ரா பதில் அளித்துள்ளார்.

இன்னொரு ரசிகர், “லாக்டவுனில் ஒரே போரிங்காக இருக்கு அக்கா.. வீட்டுக்கு வாங்க” என்று கேட்க, அதற்கு பவித்ரா, “லாக்டவுன் முடிஞ்சதும் அங்க தான்” என பதில் அளித்துள்ளார். இதேபோல் இன்னொரு ரசிகர் உங்களுக்கு பிடித்த புகைப்படத்துடன் கூடிய பாடலை பதிவிடுங்கள் என்று கேட்டதற்கு தன் செல்லநாயுடன் தானுறங்கும் புகைப்படத்துடன் கூடிய பாடலை பதிவிட்டுள்ளார்.

இந்த வரிசையில் பவித்ராவை இன்னும் நிறைய புரோஜக்ட்களில் பார்க்க விரும்புவதாக தெரிவித்த ரசிகர் ஒருவர் அவரது அடுத்த படங்கள் பற்றிய கேட்டதற்கு, “இப்போதைக்கு ஒரு தமிழ்ப் படம், ஒரு இருமொழிப்படம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சுவாரஸ்யமான பலவற்றை செய்வேன் என நம்புகிறேன்” என பதில் அளித்துள்ளார்.

தற்போது சதீஷ் நடிப்பில் உருவாகும் படமொன்றில் பவித்ரா லக்‌ஷ்மி நடித்து வருவதாக அண்மையில் பூஜையுடன் கூடிய புகைப்படங்களும் தகவல்களும் வெளியானதை அடுத்து பவித்ராவின் ரசிகர்கள் பட்டாளம் உற்சாகம் ஆகிவிட்டனர்.

பவித்ரா நடிக்கும் திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் இப்போதில் இருந்தே அவர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

ALSO READ: சோகத்தை ஏற்படுத்திய 'மற்றுமொரு' நகைச்சுவை நடிகரின் மரணம்!.. திரைத்துறையினர் அதிர்ச்சி!!

மற்ற செய்திகள்

Cook with comali pavithra reveals about her next film to fans

People looking for online information on Pavithra Lakshmi will find this news story useful.