Reliable Software
www.garudavega.com

VIDEO: "சிவாங்கியா இது? அப்பவே அப்படி!".. சிறுவயதில் அழகாக பாடும் சிவாங்கி! VIRAL வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி படத்தில் ராரா பாடலை பாடிய பிரபல பாடகி பெண்ணி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டார்.

cook with comali fame Sivaangi cute old singing video trending

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்களில் பங்கேற்ற சிவாங்கி ரசிகர்கள் இடையே நேரடியாக பிரபலமானார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடயே நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டு வரும் சிவாங்கி பேசினாலும் பாடினாலும் என்ன செய்தாலும் அவருக்கே உரிய இயல்பும் குறும்பும் அவரை ரசிக்க வைக்கிறது.

இதனாலேயே சிவாங்கியை பலரும் சிவாங்கி பாப்பா என்று அழைப்பதுணடு. இப்படி வளர்ந்த சிவாங்கியே பாப்பா என்று அழைக்கப்பட்டால், சிவாங்கி, பாப்பா வயதில் எப்படி இருந்திருப்பார். ஆம் தம்மடைய தந்தையின் மடியில் அமர்ந்தபடி அப்போதே சிவாங்கி பாடும் க்யூட்டான பாடல் அடங்கிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அண்மையில தம் மூக வலைதளம் மூலம் லைவ் செஷனில் வந்து சிவாங்கி பாடிய பாடல் அனைவரிடையே வைரலானது. இதேபோல் இந்த சிவாங்கி சிறு வயதில் பாடிய இந்த பாடலும் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் திரைப்படத்தில் தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்திருக்கிறார் சிவாங்கி. இதேபோல் கவின் நடிப்பில் உருவான அஸ்கு மாரோ ஆல்பம் பாடலை பாடினார். அந்த பாடலில் நடித்திருந்தார்.

மேலும்  சாந்தனு பாக்யராஜ் அதுல்யா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை ஷாம் விஷாலுடன் இணைந்து பாடியிருக்கிறார் சிவாங்கி. டாக் லெஸ் வொர்க் மோர் என்கிற அந்த பாடல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பிரபல டிவி சேனலில் தமன்னாவின் 'நவம்பர் ஸ்டோரி' சிறப்பு ஒளிபரப்பு! எப்போ தெரியுமா?  வைரல் ப்ரோமோ!

VIDEO: "சிவாங்கியா இது? அப்பவே அப்படி!".. சிறுவயதில் அழகாக பாடும் சிவாங்கி! VIRAL வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali fame Sivaangi cute old singing video trending

People looking for online information on Sivaangi, Trending will find this news story useful.