குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர்கள் அஸ்வின் குமார் மற்றும் புகழ். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு “என்ன சொல்ல போகிறாய்” என்று பெயரிடப்பட்டு படத்தின் பூர்வாங்க பணிகள் நடை பெற்று வந்தன.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், பாடகர் சங்கர் மகாதேவன் குரலில் தேசிய விருதை வென்ற “என்ன சொல்ல போகிறாய்” பாடல், தல அஜித் நடித்த “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படத்தில் உள்ள மிகச்சிறந்த பாடலாகும். அந்த பாடலின் வரியை இந்த படத்தின் தலைப்பாக படக்குழு வைத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 19) சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் நகர்ப்புற பகுதியில் நடைபெறும் காதல் காமெடி கதையாக "என்ன சொல்லப் போகிறாய்" திரைப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் கையாள்கிறார்.
இந்த படத்தில் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். குணசித்திர கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர்.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, இந்த திரைப்படம் அஸ்வின் குமாரின் அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#EnnaSollaPogirai First Day shooting started and the whole team is vaccinated. The team is following all covid norms during the shoot.@i_amak @VijaytvpugazhO @ImHharan @muralikris1001 @DoneChannel1 @tridentartsoffl #JaMathivathanan @RubiniSakthi #TridentArts #Ashwin pic.twitter.com/xiVAmKLANn
— Trident Arts (@tridentartsoffl) July 19, 2021