விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
Also Read | மூன்றாம் நாள் காரியம்.. மறைந்த தந்தையின் திருவுருவ படத்துக்கு மகேஷ் பாபு அஞ்சலி!
நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார்.
அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD நோய்க்குறி உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.
தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். விக்னேஷ் சிவன் தயாரிப்பிலான இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அதையொட்டி அவருக்கு பரிசளிக்கும் வகையில் வெளியாகிறது.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதுடன், அண்மையில் இவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறைமையில் இரட்டைக் குழந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ பெற்றோர்களாகினர். திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த காட் ஃபாதர் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
Happy Birthday to our Lady SuperStar! 🌟#Nayanthara #LadySuperStar #Connect #ConnectTeaser From 6PM!@VigneshShivN @AnupamPKher #Sathyaraj #VinayRai @Ashwin_saravana@Rowdy_Pictures pic.twitter.com/6myRljfFfe
— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 17, 2022
Also Read | "புதிய தொடக்கம்".. முன்னணி நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ்.. TRENDING புகைப்படங்கள்! என்னவா இருக்கும்?