காமெடி நடிகர் மதுரை முத்து மருத்துவ பணியாளர்கள் பற்றிய உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரபலங்கள் தொடங்கி பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சிகளில் ஸ்டான்ட் அப் காமெடி செய்யும் மதுரை முத்து உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது வீடியோவில், ''இந்த கொரோனா நேரத்தில் நமக்காக பணி செய்த மருத்துவ பணியாளர்கள் 90க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா..? ஓரு ஊரில் அவர்களை கட்டையும் கல்லும் கொண்டு அடித்து விரட்டுகிறார்கள். ஒரு அம்மா போலீஸ்காரர் சட்டையை பிடித்து அடிக்க போகிறார். இன்னொருவர் எச்சிலை துப்புகிறார். அப்படி இல்லாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.