பிரபல சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ரோபோ ஷங்கர் பங்குபெறும் 'கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0' எனும் கேம் ஷோ, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
சிந்துபாத்தையும், ஒரு அற்புதமான அட்வெஞ்சுரையும் நினைவுபடுத்தும் ஒரு வார்த்தையாக நம் நெஞ்சுக்கு நெருக்கமாக இருப்பது ‘கன்னித்தீவு’. இந்த பெயரிலான கதைகளை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. இந்நிலையில் இந்த பெயரை மையமாகக் கொண்டு அனைவரையும் ஈர்க்கும் ஒரு ஷோவை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப உள்ளது.
ஆம், தமிழகத்தின் பொழுதுபோக்கு அம்சமாக திகழும் சேனல்களுள் ஒன்றான கலர்ஸ் தமிழ் சேனலில்,‘கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0’ என்கிற பெயரில் ஒளிபரப்பாகவுள்ள, இந்த ஷோவில் நடிகர் ரோபோ ஷங்கர் பங்கு பெறுகிறார். இதற்கான சில விநாடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும் எனக்கூறப்படும் இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவலை கலர்ஸ் தமிழ் சேனல் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
#GetReadyMakkale 🤩🤩 #BigAnnouncement1 | கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 🏝
ஆகஸ்ட் 1 முதல், ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில் #KanniTheevu | #UllaasaUlagam2 | #RoboShankar | @realRoboshankar | #ColorsTamil pic.twitter.com/nvf3SFhKp4
— Colors Tamil (@ColorsTvTamil) July 4, 2021
இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல், ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது ஒரு கேம் ஷோவா?? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது என்ன மாதிரியான ஷோ என்கிற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.
முன்னதாக நடிகர் ரோபோ ஷங்கர், ‘பொங்குறோம் திங்குறோம்’ எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக, மாஸ் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த நிகழ்ச்சியை எந்த சேனலில் ஒளிபரப்பவுள்ளார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.