சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி & தமிழக ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Also Read | தனுஷ் & செல்வராகவன்.. 'நானே வருவேன்' Shooting Spot-ல.. வைரலாகும் BTS.. செம அப்டேட்
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் காஃபி வித் காதல்.
இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மறைந்த நடிகர் பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன் , ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன் . அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் கைப்பற்றி உள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் இந்த படத்தினை வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
Also Read | PS1: "பொன்னியின் செல்வன்".. வெளியான மற்றொரு வில்லனின் தெறி லுக்!