“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்
Also Read | விஜய் ஆண்டனி - பாரதிராஜா - சத்யராஜ் நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா?
Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,
மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த, மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள், டப்பிங் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் கொடுத்துள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இப்படத்தை பார்க்கலாம். குழந்தைகள் பெற்றோர்களின் மேற்பார்வையில் இப்படத்தை பார்க்கலாம்.
இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் கிருஷ்ணன் பணிச் செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் - ஆண்டனி ரூபன், கலை இயக்கம் - வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் - ஸ்டண்ட், C H பாலு - ஸ்டில்ஸ், யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ், தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி - நடன இயக்குனர் , அனு வர்தன் - ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு - சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX - ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8