KAAPAN USA OTHERS
Map Banner BGMA BGMA Ticket BGM Shortfilm 2019

‘புரட்சி தலைவி அம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் - FEFSI-க்கு CHECK வழங்கிய தமிழக முதல்வர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஞ்சிபுரம் - பையனூர் அருகே  ‘‘புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம்" அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையினை வழங்கினார்.

CM Edappadi Palanisamy issued 1 crore to FEFSI

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ‘‘புரட்சித் தலைவி அம்மா” படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

கடந்த ஆண்டு திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகே அரங்கம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை ஏற்ற தமிழக முதல்வர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க அரசு சார்பில் ரூ. 5 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக  (FEFSI) தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

CM Edappadi Palanisamy issued 1 crore to FEFSI

People looking for online information on CM Edappadi Palanisamy, FEFSI, Rk selvamani will find this news story useful.