www.garudavega.com

நடிகர் அர்ஜூன் மீது நடிகை கொடுத்த #METOO புகாரில் பரபரப்பு திருப்பம்!! பறந்தது நோட்டீஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் மற்றும் கன்னட திரைப்பட உலகின் பிஸியான முன்னணி நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தொடர்ந்த #MeToo புகாரில், நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

clean chit to actor Arjun in sruthi hariharan sexual allegation

தமிழில் நெருங்கி வா முத்தமிட்டுவிடாதே உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் நடிகர் அர்ஜூன் நடிப்பில் கன்னடத்தில் வெளியான விஸ்மயா (தமிழில் நிபுணன்) என்கிற திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.

clean chit to actor Arjun in sruthi hariharan sexual allegation

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

clean chit to actor Arjun in sruthi hariharan sexual allegation

இதன்பேரில் கப்பன்பார்க் போலீசார் நடிகர் அர்ஜூன் தொடர்பான இவ்வழக்கில் விசாரணை செய்துவந்தனர். இந்த குற்றச்சாட்டை நடிகர் அர்ஜுன் மறுத்துவந்தார்.

இதனிடையே நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் குற்றச்சாட்டுகள் பொய் என நடிகர் அர்ஜூன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி, கடந்த 3 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்கிற முடிவை காவல்துறை எட்டியுள்ளதாக தெரிகிறது.

clean chit to actor Arjun in sruthi hariharan sexual allegation

இந்நிலையில், நடிகர் அர்ஜூன் மீதான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நடிகை ஸ்ருதி ஹரிஹரனை, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கோரி கப்பன் பார்க் போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.மேலும் இவ்வழக்கில், நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கப்பன் பார்க் போலீசார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய  முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Clean chit to actor Arjun in sruthi hariharan sexual allegation

People looking for online information on Arjun Sarja, Nibunan, Sruthi Hariharan will find this news story useful.