அமிர் கான் & அக்ஷய் குமார் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Also Read | ஈஷா சத்குரு நிகழ்ச்சியில் சமந்தா.. செம வைரலாகும் புதிய போட்டோஷூட் போட்டோஸ்.!
அமிர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலிசாகிறது. 1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். அமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரிக்கிறார்.
இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, அதனை முன்னிட்டு முதல் லுக் POSTER வந்து நல்ல வரவேற்பை பெற்றது, இச்சமயத்தில் இந்த லால் சிங் ஷத்தா படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்தது, இதற்கான அறிவிப்பை POSTER வழியாக வெளியிட்டது.
அதன் படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2, பீஸ்ட் படங்களுடன் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இச்சூழலில் டீசருடன் ரக்ஷா பந்தன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் 'ரக்ஷா பந்தன்' திரைப்படத்தின் டீஸரைக் வெளியிட்டு, அக்ஷய் குமார், ரக்ஷா பந்தன் படம் ஆகஸ்ட் 11,2022 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். அத்ரங்கி ரே படத்திற்கு பிறகு ரக்ஷா பந்தனில் அக்ஷய் குமார் - ஆனந்த் எல் ராய் கூட்டணி இணைந்துள்ளது.
Also Read | சொந்த பந்தம் சூழ நடிகை சோனம் கபூருக்கு வளைகாப்பு.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!