நேற்றைய தினம் பிக்பாஸில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. சுரேஷ் சக்ரவர்த்தி சனம் ஷெட்டியை கையில் வைத்திருக்கும் தடியால் தாக்கியதையடுத்து, அவர் தனது பொறுமையை இழந்து கோபப்பட்டு கத்தினார். இதனை அடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி மன்னிப்பு கேட்டார். பின்பு அவரே போய் அழுவது போல மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ரியோ, ரம்யா பாண்டியன் ஷிவானி இடையே வாக்குவாதம் சிறிய ஏற்படுகிறது. மீண்டும் இந்த சண்டை குரூப்பிஸம் தொடர்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.