நேற்று என்ன டாஸ்க் கொடுப்பது என பிக்பாஸ் குழம்பி விட்டார் போல. அல்லது ரணகளமாக இருக்கும் பிக்பாஸ் வீட்டை கொஞ்சம் அமைதியாக மாற்ற முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை. பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம், பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என சுமாரான இரண்டு தலைப்புகளை கொடுத்து பேச வைத்தார். இதில் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்னும் தலைப்பில் பேசிய பாலாஜி போற போக்கில் ஏகப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி போட்டு போய்விட்டார்.
அவர் பேசும்போது ,'' பொதுவாக என் மனசு தங்கம். ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம். இது ஆனந்த குடும்பம் என்றால் எதற்கு நாமினேஷன் செய்கிறீர்கள். ஆஜித் வைத்திருக்கும் எவிக்ஷன் பாஸை எடுக்க பயம். சுற்றிலும் 50 கேமராக்கள் இருப்பதால் மானம் போய்விடும் என்ற பயம் மற்றபடி பாசம் எல்லாம் இல்லை. வயதில் பெரிய ஒருவரை வாடா, போடா என அழைப்பது என்ன நாகரிகம். அடுத்த முறை நாமினேஷனில் தாத்தா(சுரேஷ்) போனால் அவருக்கு பதில் நான் போகிறேன் என சொல்லுங்கள். அப்போது ஒத்துக் கொள்கிறேன். இது ஆனந்தமான குடும்பம்,'' என்றார்.
#BalajiMurugaDoss well said to Archana.. Archana feels like she is the head of the house #BiggBossTamil4 👏😂
— ŊιτΗιψα😍✌️ (@Nithzvitharv) October 22, 2020
நடுவராக இருந்த அர்ச்சனாவுக்கும், பாலாஜிக்கும் பட்டிமன்றத்தின்போது உரசல்கள் எழுந்தன. அர்ச்சனா ஒருதலை பட்சமாக பேசுவதாக பாலாஜி தெரிவிக்க அதெல்லாம் இல்லை என அர்ச்சனா மறுத்தார். மேலும் வீட்டில் சிறிய குழந்தைகள் இப்படிதான் பேசும் என்பது போல எடுத்துக்காட்டு ஒன்றை அவர் பாலாஜியை மேற்கோள் காட்டி கூறினார். இதைக்கேட்ட பாலாஜி நான் ஒண்ணும் கொழந்தை கெடையாது என்ன அப்படி சொல்லாதீங்க என நேரடியாகவே தெரிவித்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் தம்பிக்கு நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட் பட்டம் கொடுத்ததில் இருந்து ஆளே மாறிப்போய் விட்டார். தற்போது எல்லாம் ஒரே சண்டை மோடிலேயே இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ நீ நடத்து பாலாஜி என அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். ட்ரூத் ஆர் டேர் டாஸ்க்கின் போது பாலாஜி கொளுத்திப்போட்ட வெடிகளால் அன்று மட்டும் பிக்பாஸ் வீட்டில் 5 சண்டைகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.