நேற்றைய தினம் பிக்பாஸில் பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருந்தது சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாலாஜிதான். பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக ஆரம்பத்தில் குற்றம் சாட்டிய சுரேஷ், தற்போது இளம் வயதினரை சேர்த்து அதே குரூப்பிஸம் செய்வதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் ஒன்றாக இருந்த சுரேஷ் மற்றும் பாலாஜி, இன்று முட்டிக் கொள்வது போன்ற புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.