நடிகை சமந்தா தான் இன்றைய ஹாட் டாப்பிக் என்று சொல்லலாம். அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் தயாரிக்கின்றனர். அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் இப்படத்துக்காக முதல் முறையாக கைகோர்த்துள்ளனர்.
சுகுமார் இப்படத்தை இயக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா திரைப்படம் விவரிக்கிறது.
இந்த பாடத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக வெளியான தகவல் வைரலானது முதலே, ரசிகர்கள் அந்த பாடலை காண ஆவலாகினர். இந்நிலையில் இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியானதை அடுத்து, தெலுக்கில், ‘ஓ அண்டாவா’ மற்றும் தமிழில், ‘ஓ சொல்றியா’ ஆகிய லிரிக் வீடியோ பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.
இந்நிலையில் சமந்தாவின் மேனேஜர் தரப்பில் இருந்து வெளியான ஒரு அதிகாரப்பூர்வ விளக்கம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
இது வம்சி சேகர், “சமந்தா முழுமையாக ஆரோக்கியமாக இருக்கிறார். லேசான இருமலால், சமந்தா நேற்றைய தினம் AIG ஹாஸ்பிடலுக்கு சென்றார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சமந்தா, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்துள்ள, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதேபோல், சமந்தா நடிப்பில்‘யசோதா’ எனும் திரைப்படத்தின் தகவலும் அண்மையில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஷாந்த ரூபன் நடிப்பில், சமந்தா புதியதொரு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.