பிரபல ஒளிப்பதிவாளர் காலமாகியுள்ள தகவல் திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பாரதிராஜா இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.வி.நிவாஸ். மேலும் இவர் பாக்கியராஜ், சி.வி.ஶ்ரீதர், கங்கை அமரன் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களின் படங்களில் தனது ஒளிப்பதிவால் கவனத்தை ஈர்த்தார்.
கல்லுக்குள் ஈரம், எனக்காக காத்திரு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (1/02/2021) ஒளிப்பதிவாளர் பி.வி.நிவாஸ் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. 75 வயதான இவர் இன்று காலை கேரளா மாநிலத்தில் உள்ள கேலிகட்டியில் இயற்கை எய்தியுள்ளார்.
இதை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ''என் திரைப் பயணமான 16 வயதினிலே முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர், என் நண்பன் திரு. நிவாஸ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்'' எமோஷனலாக பதிவிட்டுள்ளார்
மேலும் பல்வேறு திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு உருக்கமான இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
என் திரைப் பயணமான
16 வயதினிலே முதல்
தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி,
இந்திய திரை உலகின் மிகச்
சிறந்த ஒளிப்பதிவாளர்,
என் நண்பன் திரு. நிவாஸ்
மறைவு அதிர்ச்சியளிக்கிறது
ஆழ்ந்த இரங்கல்கள்.
பாராதிராஜா pic.twitter.com/0gVZNeGxI3
— Bharathiraja (@offBharathiraja) February 1, 2021