www.garudavega.com

தாமரையிடம் பிரியங்கா - அபிஷேக் கேள்வி.. ஸ்கிரிப்ட் பேப்பரை கிழித்து தூக்கி வீசிய சிபி! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரின் உண்மை முகத்தை மற்ற போட்டியாளர் உலகிற்கு அடையாளம் காட்டக்கூடிய டிவி டாஸ்க் போய்க்கொண்டு இருக்கிறது.

ciby angry over thamarai questioned by abishek priyanka biggboss5

இதில் பிக்பாஸ் ரெட் டிவி தொகுப்பாளர்களாக அபிஷேக் மற்றும் சிபி இருக்கின்றனர். ரிப்போர்ட்டராக பிரியங்கா இருக்கிறார்.

இதே போல் ப்ளூ டிவி தொகுப்பாளர்களாக ராஜூ மற்றும் இமான் இருக்கின்றனர்.  ரிப்போர்ட்டராக அக்‌ஷரா இருக்கிறார். நடுவராக சஞ்சீவ் இருக்கிறார். 

இந்நிலையில் வருண் மற்றும் தாமரையை ரெட் டிவி சார்பில் பிரியங்கா மற்றும் சிபி நேர்காணல் செய்யும்போது, தாமரைக்கும் இமானுக்குமான ரிலேஷன்ஷிப் குறித்த கேள்விகளை தாமரையிடம் பிரியங்கா கேட்டார். தொடர்ந்து அவர் பல கேள்விகளை முன்வைப்பதாகவும் தெரிகிறது.

இதனிடையே, அப்படி கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு, “உங்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று கூட சொல்லலாம்” என தாமரையிடம் சிபி கூறிவிட்டார்.

இதனால் அதிர்ந்துபோன அபிஷேக், “என்னடா சொல்ற? அது ஸ்கிரிப்ட்ல எழுதுனதுதானே?” என்று கேட்டுவிட்டு, தற்காலிகமாக பிரேக் விட்டார். அப்போது அப்படியெல்லாம் பிரேக் அடிக்கடி விடமுடியாது என்று சிபி பேசத் தொடங்கினார். மேலும் இது ஸ்கிரிப்டில் எழுதப்படவில்லை என்றும் சிபி வாதம் செய்தார்.

முடிவில், அபிஷேக், “மச்சான் நல்லா பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒன்னு பண்றோம். எழுதி வைத்ததை கேட்பதற்கு என்ன?” என்பது போல் கேட்க, ஆவேசமான சிபி, பேப்பரை கிழித்து தூக்கி போட்டுவிட்டு போய்விட்டார்.

இந்த பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து சிபி-அபிஷேக்-பிரியங்கா மற்றும் பிரியங்கா - தாமரை வாக்குவாதங்களை அடுத்தடுத்து பிக்பாஸில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ciby angry over thamarai questioned by abishek priyanka biggboss5

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Ciby, Ciby abishek fight, Thamarai priyanka fight, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.