பிக்பாஸ் நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் முதலாக இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது மதுமிதா வெளியேற்றப்பட்டதுடன், 4 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறியுள்ளனர். இதனிடையே வார இறுதியில் கமல்ஹாசன் அந்த வாரம் முழுவதும் நடந்தவற்றை பற்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை கமல் முன்னிலையில் விவரித்தனர். குறிப்பாக தங்களுடன் தோளோடு தோளாக நின்றவர்கள் யார்? முதுகில் குத்தியவர் யார்? என்று, ஒவ்வொருவரும் இருவர் பெயரைச் சொல்ல வேண்டும். இதேபோல் ஒவ்வொருவரும் பிறர் மீது இருக்கும் விமர்சனம், புகார் உள்ளிட்டவற்றை கமல் முன்னிலையில் கூற வாய்ப்புகள் இருந்தன.
இதனைத் தொடர்ந்து அக்ஷரா தன் முதுகில் குத்தியது சிபி என்று குறிப்பிட்டார். இதுபற்றி அக்ஷரா பேசிக்கொண்டிருக்கும்போதே எழுந்து கமல்ஹாசனிடம் விளக்கமளிக்கும் முயன்ற சிபி, “அக்ஷரா தான் எப்போதும் வலிமை மிகுந்த ஒரு அணியில் தான் இருப்பேன் என் சொல்கிறார், அதனால்தான் அவர் கேப்டனாக இருக்க தகுதி இல்லாதவர் என்று எனக்கு தோன்றியது.. பானை உடைக்கும் டாஸ்கில் அவரது பானையை உடைத்தேன்” என்று கூறினார்.
அக்ஷரா பேசும்போது, “மனசுக்குள் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு நேரம் வரும்பொழுது பழிவாங்கி விட்டார். முதுகில் குத்திவிட்டார் சிபி” என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது இடைமறித்த சிபி, “அக்ஷரா அவரிடம் பேசிய கெட்டவார்த்தை தமிழில் இருந்ததாகவும், அது ஆங்கிலத்தில் இருந்தால் கூட ஒன்னும் பரவாயில்லை என்று கூறினார்” என்று சொல்லி வருத்தமடைய அதற்கு அக்ஷரா இடைமறித்து விளக்கம் சொல்ல முயற்சி செய்தார்.
இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும்போது கமல்ஹாசன் எக்ஸ்க்யூஸ் மீ என்று இடைமறித்து, “அந்த வார்த்தைகளை தவிருங்கள்!” என்று தான் கூறினேன், ஆங்கிலமோ தமிழிலோ எதில் பேசினாலும் அது சரியான வார்த்தை என்று ஆகிவிடாது என்று தெளிவுபடுத்தினார். அதைவிட பண்பாக பேசுங்கள் என அறிவுறுத்தினார்.
முன்னதாக பால் பண்ணையில் பால் சேகரிக்கும், ‘செண்பகமே செண்பகமே’ டாஸ்கில், அக்ஷராவிடமிருந்து, அவரது கையிலிருந்த பால் பாட்டிலை சிபி விடுங்க முயற்சித்தார்.
இதேபோல் பொம்மை டாஸ்கில் அக்ஷரா மற்றும் நிரூப் பிரச்சினையில், வருண் கோபமடைய, அப்போது இதுபற்றி பேசிய சிபி, அக்ஷராவிடம் தகாத வார்த்தைகளை பேசி விட்டார் என்பதும் அப்போது, அக்ஷரா கோபம் அடைந்து, “என்ன வார்த்தை பேசுற?” என்று ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.