ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுமான கிரிஸ்டோபர் நோலன் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த படம் டெனட். இதன் ட்ரெய்லர் பிரம்ம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
உலகம் எங்கும் வியாபித்திருக்கு கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படவில்லை. நிலைமை சற்று சுமுகமான பின் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழுவினர், இப்படம் ஜூலை 17-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தனர். ஆனால் சில சிக்கல்களால் இப்படம் ஜூலை 31-ம் தேதிதான் வெளியாகும் என்று அறிவிக்கபப்ட்டது.
எப்படியாவது இந்தப் படத்தை உரிய நேரத்தில் திரையிட்டுவிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனை தொடர்ந்து வருவதால் திரையரங்குகள் உரிய நேரத்தில் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பொது சுகாதார அலுவலர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் முடிவு செய்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடத் தயாராக இருந்தால் இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது டெனட் திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என்றனர் படக்குழுவினர்.
எதையும் உறுதியாக கூறமுடியாத காலகட்டத்தில் இருப்பதால் எல்லாமே Tenet படம் உள்ளிட்ட எல்லாமே tentative ப்ளான்ஸ் தான் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.
இந்தத் திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 15 பில்லியன் ரூபாய்க்கும் மேல் இருந்துள்ளது. இதனால் லாபம் ஈட்டும் நோக்கில் சரியான நேரத்தில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.