இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டமான டெனெட் (Tenet) படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தற்போது வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர். மூன்று நிமிடம் ஓடக் கூடிய இந்த ட்ரெய்லரில் படத்தின் கதை இதுவாக இருக்கும் என்ற யூகம் கிடைக்கிறது.
இந்தப் படம் (மூன்றாம் உலகப் போரைத் தடுப்பது பற்றியதும், டைம் இன்வெர்ஷன் பற்றியதுமான Sci-fi படம் என நமக்குத் தெரிகிறது.
டைட்டில்
படத்தின் டைட்டில் - Tenet என்பதை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடதாக என எப்படி படித்தாலும் அந்த வார்த்தை ஒரே போல அமைக்கப்பட்டது. பாலிண்ட்ரோம் என்று இதை சொல்வார்கள்.
கதை என்ன?
இன்செப்ஷன், இண்டர்ஸ்டெல்லார் படங்களில் வந்தது போல காலத்தை வைத்து திரைக்கதை எழுதுவதில் வல்லவரான நோலன், TENET படத்தில் அதன் தொடர்ச்சியாக ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அவரது மொமண்டோ படத்தின் பேட்டர்னை இந்தப் படத்தில் பின்பற்றியுள்ளார். அதாவது முதலும் தொடக்கமும் முன் பின்னே என மாறி வர படத்தின் மையப் பகுதியில் க்ளைமேக்ஸ் கட்டமைக்கப்பட்டிருக்கும். டெனெட் இன்செப்ஷன் படத்தின் சீக்வெல் என்றும் கூறப்படுகிறது.
டெனட் நடிகர்கள்
பாட்டின்சன், ஜான் டேவிட் வாஷிங்டன், போஸி, பிரானாக், படேல் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோரைத் தவிர, டெனெட்டில் எலிஸபெத் டெபிகி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், மைக்கேல் கெய்ன் மற்றும் டென்சில் ஸ்மித் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிரிஸ்டபர் நோலன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நோலனின் மனைவி எம்மா தாமஸ் படத்தின் ஒரு தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்தியா, டென்மார்க், எஸ்டோனியா, இத்தாலி, நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மூன்று கண்டங்களில் ஏழு நாடுகளில் டெனட் படமாக்கப்பட்டது.
முதல் ட்ரெய்லர்
கடந்த ஆண்டு டிஸம்பர் மாதத்தில் TENET முதல் ட்ரெய்லர் வெளியானதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள நோலன் ரசிகர்களை பெரிதும் எதிர்ப்பார்க்கச் செய்துவிட்டது. கிரிஸ்டோபர் நோலன் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை நடுவில் டெனெட்டை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகளவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன, ஜூலை மாதத்தில் வெளியாகக் கூடிய இரண்டு படங்களில் டெனெட் ஒன்றாகும்.
ரீலீஸ் எப்போது?
டெனெட் தற்போது ஜூலை 17-ம் தேதி உலகளவில் வெளியிடப்பட தயாராக உள்ளது. ஆனால் சரியான நேரத்தில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படாவிட்டால் ஆகஸ்ட் மாத்துக்குத் தள்ளிப் போகலாம். வார்னர் பிரதர்ஸ் ஜூலை மாதம் டெனெட்டை வெளியிட உறுதியாக உள்ளார்கள். ஆனால் அது நடக்குமா என்று இப்போது சொல்ல முடியாது.
ஜூலை மாதத்தில் இந்திய ரசிகர்கள் டெனெட்டைப் பார்க்க முடியாமல் போகலாம், காரணம் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவல் சூழ்நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. அப்படி வெளியானால் வெகு சில திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
டெனட் டிரெய்லர்