ஓப்பன்ஹைமர் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Also Read | பிரபல இளம் நடிகருக்கு அஜித் கொடுத்த பரிசு.. நெகிழ்ந்து போய் ட்வீட் செய்த நடிகர்!
உலக சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
ஓப்பன்ஹைமர் என இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படம், கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்வின் எழுதிய ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வருகிறது.
இத்திரைப்படம் Syncopy Inc. மற்றும் Atlas Entertainment ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும், நோலன், எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின் முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய மன்ஹாட்டன் திட்டத்தில் அவரது பங்கிற்காக "அணுகுண்டின் தந்தை" என்ற பெருமையைப் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரான ஓப்பன்ஹைமராக சில்லியன் மர்பி நடிக்கிறார். நோலனுடன் மர்பி ஆறாவது முறையாக இணைந்துள்ளார்.
மர்பியுடன் எமிலி பிளண்ட், மாட் டாமன், ராபர்ட் டவுனி ஜூனியர், மற்றும் ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 21, 2023 அன்று அமெரிக்காவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் விநியோகம் செய்யாத நோலனின் முதல் படம் இது. இந்த படம் IMAX, 70mm & 35mm ஆகிய இரு முறைகளில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும். ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துடன் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் பார்வைக்கு யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது. சில்லியன் மர்பியின் குரலில் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அணுகுண்டு சோதனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் டிரெய்லரில் அணுகுண்டு சோதனை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
They won’t fear it until they understand it. And they won’t understand it until they’ve used it. Watch the trailer for #Oppenheimer. In theaters 7 21 23. pic.twitter.com/nvbxOBCwur
— Oppenheimer (@OppenheimerFilm) December 19, 2022
Also Read | நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போல.. பிரபல முன்னணி நடிகையின் தெறிக்கும் உலகக் கோப்பை கொண்டாட்டம்.. VIDEO