2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்குவதற்கு வந்த வாய்ப்பை பிரபல நடிகர் கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | நடிகர் சரவணன் நடித்த 'THE LEGEND'.. உலகளவில் செய்த மொத்த வசூல் இத்தனை கோடி ரூபாயா! ஆஹா
கடந்த 2022-ஆம் வருடம் மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் 94-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கிறிஸ் ராக் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது வில்ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடி குறித்து கிண்டல் தொனியில் கிறிஸ் ராக் பேசியதால், மேடையின் கீழே அமர்ந்திருந்த வில் ஸ்மித் கோபமடைந்து எழுந்து விறுவிறுவென மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கை ஓங்கி அறைந்துவிட்டார். தமது சக நடிகர் ஒருவரை நடிகர் வில் ஸ்மித் இப்படி ஆஸ்கார் அரங்க நிகழ்ச்சியில் வைத்து அறைந்த விவகாரம் உலக அளவில் பெரும் பேசு பொருளானது.
அதே நிலையில், கிறிஸ் ராக்கை அப்படி பொது வெளியில் வைத்து அறைந்ததற்கு அப்போதே மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித், அதற்கான தன்னிலை விளக்கத்தையும் கொடுத்தார். இந்நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஒரு ஸ்டாண்ட் அப் ஷோவில், அடுத்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவது இல்லை என கிறிஸ் ராக் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
Also Read | அமெரிக்காவில் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்.. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முழு வசூல் விவரம்!