சீயான் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Also Read | நடிகர் கமல்ஹாசன் & இயக்குனர் மணிரத்னம் சந்திப்பு.. கூட இவங்க வேற இருக்காங்க! சூப்பர் ஃபோட்டோ
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த 'கோப்ரா' திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இந்த பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் 18 ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீயான் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கலான் படத்தின் கெட்டப்பில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு "No Shave November" என தலைப்பிட்டுள்ளார்.
கரு நிற கோட் சூட் உடையில் நவநாகரீக தோற்றத்தில் சீயான் விக்ரம் புகைப்படங்களில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.
Also Read | 'துணிவு' படத்தின் பாடல் படப்பிடிப்பு.. அஜித்துடன் இருக்கும் Photo-வை பகிர்ந்த பிரபல நடிகர்!