Reliable Software
www.garudavega.com

VIDEO: "டெய்லி கிஸ்ஸிங் சீன் தான்".. சித்தி2 சீரியல் நந்தன்.. ப்ரீத்தி க்யூட் PERFORMANCE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods Gold Icons டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவின் நிகழ்வில் சித்தி நந்தன் ப்ரீத்தி பகிர்ந்துகொண்ட ஜாலியான  பேட்டி Behindwoods-ல் வெளியாகியுள்ளது.

Chithi2 Nandan Preethi cute moment Behindwoods Gold Icons video

பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள், டிஜிட்டல் பிரபலங்கள், யூடியூப் பிரபலங்கள், இயக்குநர்கள், திரைத்துறை நடிகர்கள், தொகுப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்தி தொடர் நடிகர்கள் நந்தன், பிரீத்தி கதாபாத்திர க்யூட் இணை இருவரும் விஜே தாராவுக்கு அளித்த குட்டி பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் பேசிய நந்தன் லோகநாதன், “இந்த இணைக்கு கிடைக்கும் முதல் விருது இது.. நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்!” என்று குறிப்பிட்டதுடன்.. “இதுவரை 250 எபிசோடுகளை கூட கடக்காத நிலையில் இப்படி ஒரு அங்கீகாரம் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ப்ரீத்தி ஷர்மா பேசும்போது, “குறுகிய காலத்தில் நாங்கள் இருவரும் மக்களுக்கு ரீச் ஆகி இருக்கிறோம். இது எங்களுக்கு முதல் விருது ஒரு வருடத்துக்குள்ளாகவே இந்த நிகழ்வு நடக்கிறது!” என கூறியுள்ளார். பின்னர் இவர்களிடம் சில பொருட்கள் தரப்பட்டு அதன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒரு கம் ஒன்றை பிரீத்தி ஷர்மா கையில் எடுக்கிறார்.

சித்தி 2 தொடரின் ஷூட்டிங் செட்டில் இந்த கம் போட்டு யாருடைய வாயை அடைப்பீர்கள் என்று தாரா கேட்டதற்கு “என் வாயை அடைத்துக் கொள்வதற்காக தான் இந்த  கம்மை முதலில் பயன்படுத்துவேன்!” என்று சொல்லும் பிரீத்தி வெடித்து சிரிக்கிறார். மேலும் தன்னை தவிர யாழினி வாயை அடைக்க இந்த கம்மை பயன்படுத்துவேன் என்று கூறுகிறார்.

இதேபோல் நந்தன் லோகநாதன் கூறும்போது, “இவர்களை தவிர அஸ்வின் என்று ஒருவர் இருக்கிறார். அவரும் பேசிக்கொண்டே இருப்பார். அவருடைய வாயை அடைப்பதற்கு இந்த கம் பயன்படுத்தலாம்!” என்று கூறுகிறார். இதேபோல் Yes Or No என்கிற கேள்வி பதில் Session-ல், “நந்தன் டீட்டோடேலர்” என்பதற்கு அவரே No என்று சொல்லிவிடுகிறார்.

இதேபோல், “நந்தன் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டார்” என்று சொல்லப்படுவதற்கு பிரீத்தி சிரிக்கத் தொடங்கி விடுகிறார். நந்தனோ, “கண்டிப்பாக No  .. டெய்லி கிஸ்ஸிங் காட்சிதான் பண்ணிக் கொண்டிருக்கிறோம்!” என்று கூறுகிறார். அவர் சொல்வதற்கு முன்பாகவே ப்ரீத்தி ஷர்மா, “நந்தன் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டாரா? அப்படியெல்லாம் கிடையாது!” என்று சிரிக்க தொடங்கி விடுகிறார். இவர்களின் ஜாலியான பேட்டியின் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

VIDEO: "டெய்லி கிஸ்ஸிங் சீன் தான்".. சித்தி2 சீரியல் நந்தன்.. ப்ரீத்தி க்யூட் PERFORMANCE! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chithi2 Nandan Preethi cute moment Behindwoods Gold Icons video

People looking for online information on BehindwoodsGoldIcons, Chithi2, Nandan, Preethi, Trending will find this news story useful.