பாடகியின் சின்மயியின் குரலுக்கு இங்கே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பாடகராக மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் ஏராளமான படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
உதாரணமாக '96' படத்தில் த்ரிஷாவிற்கு அவர் பின்னணி குரல் கொடுத்தும், அனைத்தும் பாடல்களையும் அவர் தான் பாடியிருப்பார். இப்பொழுது வரை '96'ல் ஜானு கதாப்பாத்திரம் என்று நம் நினைவில் இருப்பது த்ரிஷாவின் நடிப்பும், சின்மயியின் குரலும் தான்.
அந்த அளவுக்கு நடிப்பால் த்ரிஷா ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றால் தனது குரலால் சின்மயி அந்த வேடத்தை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார். நடிகை சின்மயி டப்பிங் கலைஞர்களின் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாடகி சின்மயி, நடிகர் ராதாரவிக்கு எதிராக டப்பிங் சங்க தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யவுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த 2018 ஆம் ஆண்டில் என்னை எந்த ஒரு காரணமும் கூறாமல் என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார்கள். சமீபத்தில் சிட்டி சிவில் கோர்ட்டின் உத்தரவின் படி எனக்கு மெம்பருக்கான அத்தனையும் இருக்கிறது.
டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராமராஜ்ஜியம் அணியின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளோம். தேர்தல் அதிகாரி இன்னும் வரவில்லை. வந்ததும் நான் போட்டியிடுவதற்கான காரணங்களை அவர்களிடம் விளக்கி கூறுவோம். அதன் பிறகு அவர் முடிவெடுப்பார்'' என்று தெரிவித்தார்.