நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.
இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.
இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில் லியோ படம் குறித்த தனது கருத்துக்களை முன் வைத்தார். குறிப்பாக, "பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் வசூலை லியோ முறியடித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக இருப்பது தான் இலக்காக இருக்குமா? என்ற கேள்விக்கு "அதை எல்லாம் தாண்டி 1000 கோடி வசூலை எட்டுவது தான் இலக்காக இருக்கும். ஆனா இதைச் சொன்னால் உருட்டு, உருட்டுனு Troll பன்றாங்க. இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. 800-850 கோடிக்கு பிஸினஸ் வரும்." என செய்யாறு பாலு பதில் அளித்துள்ளார்.