தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சேரன். அவர் இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்', 'தவமாய் தவமிருந்து' உள்ளிட்ட படங்கள் இன்று வரை ரசிகர்களின் விருப்ப படங்களின் முக்கியமானதாக இருக்கும்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது நடவடிக்கைகளால் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தார். தற்போது பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அதில், ''லாஸ்லியா என்னிடம் தன் அப்பா பற்றி நிறைய பேசியிருக்காங்க. காலச்சூழலில் ஏற்படும் மாற்றத்தினால் கவின் மேல் அவங்களுக்கு ஈர்ப்பு ஏற்படுது. அவர் கூட நெருக்கமா உட்கார்ந்து பழக ஆரம்பிக்கிறாங்க. இருவரும் எதிர்கால திட்டத்தை பேச ஆரம்பிக்கிறாங்க.
இது அவங்க பெற்றோர்களை எப்படி பாதிக்கும் என ஒரு அப்பாவா ஃபீல் பன்றேன். இது அவங்க வீட்டுல உள்ளவங்கள பாதிச்சுடக் கூடாது என்ற பயம் தான் எனக்கிருந்தது. கவினுடைய பெற்றோரை நினைத்தும் நான் வருத்தப்பட்டேன்.
இது கவினை பொறுத்த வரை தவறாக புரிஞ்சுக்கிட்டாரு. நான் ஏதோ டிராமா பன்றதா நினச்சுக்கிட்டாரு. பல படங்கள் பிரமாதமா எடுத்து பேர் வாங்கிட்டேன். எனக்கு இங்க போய் பேர் வாங்கணும்னு அவசியமில்லை'' என்றார்.