80கள், 90கள் தொடங்கி இப்போது வரை 21-ஆம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இசை மேதைமையுடன் விளங்கி வருகிறார் மேஸ்ட்ரோ இளையராஜா.
Also Read | நயன்தாரா பெயரை தமிழ்ப் படுத்தினால் ‘உடுக்கண்ணி’-யா? - ட்ரெண்ட் ஆகும் கவிஞரின் போஸ்ட்.!
ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்து உலக மற்றும் இந்திய இசையமைப்பாளர்கள் வியக்கும் வகையிலான ஆச்சர்யங்களையும் சாதனைகளையும் இசையில் நிகழ்த்திய காட்டியவர் இளையராஜா. அதைவிடவும் பெரும் சாதனையாக இன்றளவும் இளையராஜாவின் பழைய பாடல்களை கூட சகஜமாக கேட்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருக்கிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் செஷனில் ஈடுபட்ட இசைஞானி இளையராஜா, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், மனம் திறந்தும் பதில்களை கூறியுள்ளார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், “கொஞ்சம் மழைனா போதும்.. மெட்ராஸ் மக்களுக்கு.. உடனே ஆனியன் பகோடா, தேநீர் மற்றும் ராஜா சார்.. நான் அந்த மெட்ராஸ் மக்களை சேர்ந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ராஜாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.
(சிரிக்கிறார்), “எதாவது சம்பவம் உங்க வாழ்க்கைல நடந்ததுனா என் பாட்டு உங்களுக்கு நியாபகம் வரும். அல்லது எதாவது ஒரு பாட்டு உங்களுக்கு நியாபகம் வந்ததுனா, அது உங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தோட கனெக்ட் ஆகும். இதை விட்டா வேற வழி இல்ல, உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்கள் அத்தனை பேருக்கும் இதுதான்” என்று இளையராஜா பதில் சொல்லி இருக்கிறார்.
இளையராஜா இசையில் அடுத்ததாக சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் மாயோன் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தவிர, இசைஞானி இளையராஜா, வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தற்போது இசைஞானி இளையராஜா அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Also Read | ‘மாரி-ல்லாம் Part 2 வருது.. பவர் பாண்டிக்கு எடுக்க கூடாதா.?’.. வீட்ல விசேஷம்.. சத்யராஜ் அல்டிமேட்.!