www.garudavega.com

''நடிகர் ரஜினிகாந்த் E - PASS வாங்கினாரா என்பது....'' - சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டி செல்லும் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகியது. இதனையடுத்து தங்கள் தலைவரை பார்த்த மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது  இளைய மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் E - Pass வாங்கினாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு  E - Pass தேவை என்பது கட்டாயமாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தில் E _ Pass வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து சென்னை வருவதற்கு E - Pass வாங்கினாரா என்பதை மாவட்டம் ஆய்வு செய்யும்'' என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chennai Corporation commissioner talks about Rajinikanth's Epass issue | ரஜினிகாந்த்தின் இ பாஸ் விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணைய�

People looking for online information on E - Pass, Rajinikanth will find this news story useful.