மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி கச்சேரி ஒன்று நடக்க உள்ளது.
Also Read | மாதவன் இயக்கி நடிக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தின் புதிய Motion போஸ்டர்… இணையத்தில் வைரல்
SPB மறைவு…
பல இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகில், குறிப்பாக இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல முன்னணிக் கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் மனதில் மறையாத SPB…
அவரது மறைவை ஒட்டி பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்தும், அவருடைய பாடல்கள் குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்துமான நினைவலைகளை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, இசைக்கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நினைவலைகள் நிகழ்வில் பேசும்போது, ”மருத்துவமனையில் கிரிட்டிகலான சூழலில் இருந்த போது, யாரையாவது பார்க்க விரும்புகிறீர்களா? என்று கடைசியாக கேட்டதற்கு ராஜா இருந்தால் வரச்சொல்லுங்கள் என்று கூறினாராம்.” என்று பேசியது ரசிகர்களை நெகிழச் செய்தது.
SPB 75…
இந்நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி SPB-ன் 75 ஆவது பிறந்தநாள் வருகிறது. அதையொட்டி அன்றைக்கு “SPBliveson” என்ற பெயரில் கச்சேரி ஒன்றை நடத்த உள்ளனர். இது சம்மந்தமான அறிவிப்பை எஸ் பி பி யின் மகனும் பாடகருமான எஸ் பி பி சரண் வெளியிட்டுள்ளார். இந்த கச்சேரியில் தமிழ் சினிமாவின் மூத்த இசைக் கலைஞர்களான பி சுசீலா மற்றும் எஸ் ஜானகி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மற்றும் பிரபல இசையமைப்பாளரான தேவாவும் கலந்துகொள்கிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகின்றன. விரைவில் கச்சேரி நடக்கும் இடம் மற்றும் டிக்கெட் பற்றிய விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8