www.garudavega.com

பிரபல நடிகர்களுடன் ராகவா லாரன்ஸ் & வடிவேலு.. சந்திரமுகி-2 படத்தின் செம்ம வைரல் BTS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து BTS புகைப்படம் வெளியாகி உள்ளது.

Chandramukhi 2 Vadivelu Raghava Lawrence BTS Image Went Viral

Also Read | GP Muthu : "இந்த காரணத்துக்குதான் அவர எனக்கு பிடிக்கும்.!" - GP முத்துவுக்கு கமல் புகழாரம்.!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்குகிறார்.

Chandramukhi 2 Vadivelu Raghava Lawrence BTS Image Went Viral

இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகை ராதிகா & நடிகர் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர்.  இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தது.

Chandramukhi 2 Vadivelu Raghava Lawrence BTS Image Went Viral

பின்னர் சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை மாற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் ரவி மரியா, மனோபாலா, ராதிகா, ராகவா லாரன்ஸ் & வடிவேலு ஆகியோர் உள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில்  ‘சந்திரமுகி 2’ படம் உருவாகிறது.

Chandramukhi 2 Vadivelu Raghava Lawrence BTS Image Went Viral

இந்த படத்திற்கு கலை இயக்குனர் பணிகளை தோட்டா தரணி & தோட்டா பானு கவனிக்கிறார்கள். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.  ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Also Read | Bigg boss 6 tamil : “பிக்பாஸ்-ல இருப்பவர்களில் இவங்க 2 பேரும்தான் எனக்கு ஹீரோயின்ஸ்!” - GP முத்து பதில்ஸ்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chandramukhi 2 Vadivelu Raghava Lawrence BTS Image Went Viral

People looking for online information on Chandramukhi 2, Raghava Lawrence, Vadivelu will find this news story useful.