சென்னை, 27, பிப்ரவரி 2022: நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து வந்த பிரபல திரைப்படம் 'வலிமை'. இப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
படக்குழுவினர்
இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள்.
நடிகை சயித்ரா ரெட்டி
இந்த படத்தில் நடிகை சயித்ரா ரெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சயித்ரா ரெட்டி, முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் இவர் தற்போது கயல் எனும் சன் டி.வி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வலிமை படத்தில் சாயித்ரா
இதனிடையே வலிமை திரைப்படத்தில் சாயித்ரா தோன்றும் செய்தியை அறிந்ததுமே ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். சாயித்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் க்ரைம் போலீஸாக வரும் அஜீத் மற்றும் நடிகை ஹூமா குரேஷியுடன் நடித்துள்ளார். இதில், குற்றவாளிகளை பிடிக்கும் குற்றவியல் பிரிவு போலீஸாரின் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் பெண்ணாக கலக்குகிறார் சயித்ரா.
வில்லனுக்கு அஜீத் சவால்
வலிமை படத்தில், வழி தவறிய இளைஞர்களை, தான் செய்யும் பெரும் போதை மற்றும் வழிப்பறி குற்றங்களுக்கு வில்லன் பயன்படுத்துகிறார். இதை கண்டுபிடிக்கும் அஜீத், ஒரு சமயத்தில் வில்லனுக்கு, தன் அணியில் இருக்கும் சயித்ரா மூலம் பொறி வைப்பார்.
மாஸ் காட்சி
இதில், சயித்ராவை கொல்ல முயலும் வில்லனை வேற மாதிரி தடுத்து டைவர்ட் பண்ணும் அஜீத் சயித்ராவை காப்பாற்றியும் விடுவார்.
இந்நிலையில் இதுகுறித்து சயித்ராவிடம் இன்ஸ்டா நேரலையில் கேள்வி-பதில் அமர்வில் பேசிய ரசிகர், “எங்க தல இருந்ததுனால நீங்க தப்பிச்சீங்க.. பொழைச்சுட்டீங்க” என ஜாலியாக கூறியிருக்கிறார். இதை ஆமோதிக்குமாறு பேசிய சயித்ரா, “அட. ஆமாப்பா.. ஜஸ்ட் மிஸ்” என பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடையே வலிமை படம் தொடர்பாக இந்த அமர்வில் கேள்வி கேட்ட பலரும் சயித்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read: சாத்தான் ஸ்லேவா இருப்பாரோ.. பைக்கில் வந்து அம்மன் தாலியை அடித்துச் சென்ற மர்ம நபர்!