தனது ஐந்து வயதில் 'களத்தூர் கண்ணம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கமல்ஹாசன். பின்னர் அவர் போடாத வேடம் இல்லை எனும் அளவிற்கு நடிப்பின் அத்தனை பரிணாமங்களையும் வெளிப்படுத்தி தமிழில் நடிப்பிற்கு இலக்கணமாக கூறப்படுகிறார்.
மேலும் கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்ஷன், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உச்சம் தொட்டவர் அவர். இந்நிலையில் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. அதனை முன்னிட்டு அவருக்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக வருகிற நவம்பர் 7, 8, 9, ஆகிய தினங்களில் ஒரு தொடர் கொண்டாட்ட நிகழ்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த தினம் தான், அவரது தந்தையின் நினைவு தினமாகும்.
அதன் காரணமாக அவரது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தையின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி தனது திரையுலக குருவான பாலச்சந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவன அலுவலகத்தில் திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர் மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக ஹேராம் படத்தின் சிறப்புக்காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்படவிருக்கிறது. அப்போது திரையுலகினர் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடுகிறார்.
Celebrating 60 Glorious years
ONE MAN, ONE LEGEND, ONE NAME " KAMAL HAASAN " @ikamalhaasan @vijaytelevision @shrutihaasan @aksharahaasan1 #UngalNaan #60YearsOfKamalHaasan #RaajKamalFilmsInternational #Paramakudi #HeyRam pic.twitter.com/bKKdvkUa5l
— Raaj Kamal (@RKFI) October 30, 2019
பின்னர் நவம்பர் 9 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசைவிழை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமம் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.