Reliable Software
www.garudavega.com

யூடியூபர் "சாப்பாட்டு ராமன்" அதிரடி கைது! அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘சாப்பாட்டு ராமன்’ என்கிற யூடியூப் சேனல் நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமடைந்தவர் பொற்செழியன்.

case filed on Saapattu raman you tuber por chezhiyan

ஒரே நேரத்தில் அதிக உணவுகளை சாப்பிட்டு பிரபலமாக மாறிய ‘சாப்பாட்டு ராமன்’ பொற்செழியனின் இதுவரை தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக 10 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்றிருக்கிறார்.

case filed on Saapattu raman you tuber por chezhiyan

சின்ன சேலம் பகுதியை அடுத்த கூகையூர் என்னும் பகுதியில் 28 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் இவர் மாற்று வழி மருத்துவம் படித்ததற்கான சான்றுடன் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் இவர் மாற்றுவழி மருத்துவத்துக்கு பதிலாக ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.

case filed on Saapattu raman you tuber por chezhiyan

இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இவருடைய கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் ஆங்கில மருந்துகள் இருந்ததும், அவற்றை பொற்செழியன் பரிந்துரைத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த ஆங்கில மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

ALSO READ: "5 வருஷம் ஒன்னா இருந்தோம்.. ஆபாச படங்களை வைத்து மிரட்டுறார்!".. Ex - அமைச்சர் மீது நடிகை புகார்!

முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்ததற்காக ‘சாப்பாட்டு ராமன்’ பொற்செழியனின் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தபோது பொற்செழியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

case filed on Saapattu raman you tuber por chezhiyan

இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் நல்லது என்று கூறிவந்த பொற்செழியன், அதேசமயம் மறைமுகமாக ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்து வந்தது அவருடைய சப்ஸ்கிரைபர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது.

யூடியூபர் "சாப்பாட்டு ராமன்" அதிரடி கைது! அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Case filed on Saapattu raman you tuber por chezhiyan

People looking for online information on Case, Coronamedicine, Coronavirus, Court, Covid19India, Medical, Medicine, Porchezhiyan, Saapatturaman, Trend, Youtube, Youtuber will find this news story useful.