தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.
Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய், தமது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த பர்லிங்கடன் நகர மேயர் மரியன் மீட் வார்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், கனடா நாட்டின் பர்லிங்கடன் நகரில் கனடா விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த ரசிகர்கள், இரத்த தானம், உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து மக்கள் இயக்கத்தை பாராட்டி நன்றிகளையும், வாழ்த்தினையும் மேயர் தெரிவித்துள்ளார்." இந்த வீடியோவை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
Hon'ble Mayor @MariannMeedWard From Burlington City, #Canada has congratulated and extended her greetings to Canada Thalapathy Makkal Iyakkham for their blood donation,food distribution and various other welfare activities.#Thalapathy @actorvijay Sir@Jagadishbliss #TVMI pic.twitter.com/h0GI4hzzt5
— ECR.P.Saravanan (@EcrPSaravanann) January 23, 2023