Pooja Hegde: தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த ala vaikunthapurramuloo எனும் படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் தமிழ் ரசிகர்கள் வரை ஹிட் அடித்தது.
Beast ஹீரோயின்
அந்த பாடலின் மூலம் பூஜா ஹெக்டே, இன்னும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர்தான் தற்போது விஜய் - பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் Beast படத்தின் பாடலுக்கும் நடனம் அமைக்கிறார்.
Beast நடிகர்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Beast படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடிகர்கள் யோகிபாபு, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அத்துடன் இயக்குநர் செல்வராகவன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Beast படக்குழு
இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை முதல் ஜார்ஜியா வரை பல இடங்களி வெவ்வேறு கட்டங்களாக நடந்துள்ளன.
கடற்கரையில் நீச்சல் உடையில் படு கிளாமரான புகைப்படம்
இந்நிலையில் Beast பட நாயகி பூஜா ஹெக்டே, நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் ஹாட் புகைப்படம் ஒன்றை, “Always bringing my own sunshine” என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். படு கிளாமரான இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் ஆகிவருகிறது.
ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்துக்கு தங்களுடைய கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.
Always bringing my own sunshine ☀️☺️ pic.twitter.com/seSVYJ44Ti
— Pooja Hegde (@hegdepooja) January 18, 2022
Beast படத்தின் முதல் சிங்கிள்
இதனிடையே Beast படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேய எழுதியுள்ளதாகவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.